ETV Bharat / sports

IND vs BAN: ஒருநாள் தொடரை கைப்பற்றிய வங்கதேசம்

இந்தியா-வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது.

ஒருநாள் தொடரை கைப்பற்றிய வங்கதேசம்
ஒருநாள் தொடரை கைப்பற்றிய வங்கதேசம்
author img

By

Published : Dec 7, 2022, 9:40 PM IST

மிர்பூர்: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடந்தது. இந்த போட்டியில் வங்தேச கிரிக்கெட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து இன்று (டிசம்பர் 7) 2ஆவது ஒருநாள் போட்டி ஷேர்-இ-பங்களா மைதானத்திலேயே நடந்தது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய வங்கதேச வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 83 பந்துகளுக்கு 100 ரன்களையும், மஹ்முதுல்லா 96 பந்துகளுக்கு 77 ரன்களையும் எடுத்தனர். மறுபுறம் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

அந்த வகையில் 272 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். வங்கதேச பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 102 பந்துகளுக்கு 82 ரன்களை எடுத்தார். அதேபோல அக்சர் படேல் 56 பந்துகளுக்கு 56 ரன்களையும் ரோஹித் சர்மா 28 பந்துகளுக்கு 51 ரன்களையும் எடுத்தனர். இதில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்கவில்லை. இறுதியில் ஒருநாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது.

இதையும் படிங்க: பிபா உலகக்கோப்பை: தென் கொரியாவை வீழ்த்தி பிரேசில் காலிறுதிக்கு தகுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.