ETV Bharat / sports

England Vs Bangaldesh : வங்கதேசத்திற்கு 365 ரன்கள் இலக்கு! விளாசி தள்ளிய இங்கிலாந்து வீரர்கள்! - உலக கோப்பை கிரிகெட் 2023

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான 7வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவித்தது.

Bangladesh
Bangladesh
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 10:12 AM IST

Updated : Oct 10, 2023, 2:48 PM IST

தர்மசாலா : வங்கதேசம் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 365 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். அடித்து விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை அவ்வப்போது எல்லைக் கோட்டுக்கு அனுப்பியும் வந்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் சீரிய இடைவெளியில் மளமளவென ஏறியது.

அரை சதம் கடந்த ஜானி பேர்ஸ்டோவ் (52 ரன்) ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் நிலைத்து நின்று விளையாட இங்கிலாந்து அணியின் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அபாரமாக விளையாடிய டேவிட் மலான் சதம் விளாசினார். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் சிறு தடை போல் டேவிட் மலான் (140 ரன்) ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் அரை சதம் கடந்து ஜோ ரூட் நிலைத்து நின்று விளையாட மறுபுறம் கேப்டன் ஜாஸ் பட்லர் 20 ரன், ஹாரி ப்ரூர் 20 ரன், லியாம் லிவிங்ஸோட்ன் டக் அவுட் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் சாம் கரண் (11 ரன்) கிறிஸ் வோக்ஸ் (14 ரன்) தங்கள் பங்குக்கு ரன்களை அடித்து அவுட்டாகினர்.

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. மார்க் வுட் 6 ரன்னும், ரீஸ்ஸி டோப்லே 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இங்கிலாந்து அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 364 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.

கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பின், இங்கிலாந்து வீரர்கள் இந்த ஆட்டத்தில் தங்களது திறனை செம்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி வங்காளதேசம் அணி களமிறங்கி விளையாடுகிறது.

இதையும் படிங்க : சுப்மான் கில் டிஸ்சார்ஜ்! இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் விளையாடுவாரா?

Last Updated : Oct 10, 2023, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.