ஐதராபாத் : உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணியின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பின்னர் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது.
லீக் சுற்று ஆட்டங்களில் பெரிய அளவில் சோபிக்காத பாகிஸ்தான் அணி விளையாடிய 9 ஆட்டங்களில் 4 வெற்றி 5 தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு இறங்கி நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்நிலையில், அனைத்து வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து பாபர் அசாம் தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் என்னை பாகிஸ்தான் அணியை வழிநடத்துமாறு அழைத்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில், நான் பல ஏற்றங்களையும், சறுக்கல்களையும் அனுபவமாக கடந்துள்ளேன். ஆனால், நான் என் முழு மனதுடன், ஆர்வத்துடன் பாகிஸ்தான் அணியின் பெருமையை கிரிக்கெட் உலகில் தொடரச் செய்துள்ளேன்.
வெள்ளை நிற பந்திலான போட்டியில் நம்பர் 1 இடத்தை எட்டியது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கலவையான உழைப்பு ஆகும். இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஒத்துழைப்பை அளித்ததற்கு நன்றி. இன்று நான் அனைத்து வடிவிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.
- — Babar Azam (@babarazam258) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Babar Azam (@babarazam258) November 15, 2023
">— Babar Azam (@babarazam258) November 15, 2023
இந்த முடிவு மிகவும் கடினமானது. ஆனால், இதுதான் சரியான தருணம் என்று கருதுகிறேன். ஒரு வீரராக மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நான் பாகிஸ்தானுக்காக விளையாடுவேன். புதிய கேப்டனுக்கு ஒத்துழைப்பை வழங்குவதுடன் அணிக்கு என்னுடைய அனுபவத்தையும், அர்ப்பணிப்பையும் வழங்குவேன்.
இந்த பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எனது பணிவான நன்றியை தெரிவிக்கிறேன்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பாபர் அசாம் பதிவுட்டு உள்ளார். 9 உலக கோப்பை ஆட்டங்களில் விளையாடி உள்ள பாபர அசாம் 320 ரன்கள் எடுத்து உள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் பொறுப்பில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Video : முத்த மழையில் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடி! இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ!