கோல்ட் கோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை பந்துவீச்சாளர் வீழத்திய அதிசயம் அரங்கேறி உள்ளது.
ஆஸ்திரேலிய முதல் தர கிரிக்கெட் வீரர் ஹெரத் மோர்கன். முட்கீரபா நெராங் மற்றும் மாவட்ட கிரிக்கெட் கிளப் ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். நம்ம ஊர் ஐபிஎல் போட்டிகள் போன்று ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் பிரீமியர் லீக் என்ற முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இதில் சர்பர்ஸ் பேரடைஸ் அணிக்கு எதிராக பந்துவீசிய ஹெரத் மோர்கன், ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை அள்ளி ஆச்சரியத்திற்குள்ளாகி உள்ளார். 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து இருந்த சர்பர்ஸ் பேரடைஸ் அணி 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெற்றிக் கனியை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தது.
வெற்றி இலக்கை விரட்ட காத்திருந்த ஜேக் கார்லண்ட் (65 ரன்) என்பவரை ஆட்டமிழக்கச் செய்த ஹெரத் மோர்கன், அடுத்தடுத்து கானர் மேத்சன், சர்பர்ஸ் அணியின் கேப்டன் மைக்கேல் கர்டின், வேட் மெக்டௌகல், ரிலே எக்கர்ஸ்லி மற்றும் பிராடி பெலன் என அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
இதில் கடைசியாக அவுட்டான ரிலே எக்கர்ஸ்லி மற்றும் பிராடி பெலன் க்ளீன் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அசால்ட்டாக களமிறங்கி அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களையே ஆச்சரியத்திற்குள்ளாகி உள்லார் ஹெரத் மோர்கன். இதற்கு முன் இந்திய வீரர் அபிமன்யு மிதுன் ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே முதல் தர கிரிக்கெட்டில் சாதனையாக இருந்தது.
தற்போது இந்த சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஹெரத் மோர்கன் முறியடித்து புது வரலாறு படைத்து உள்ளார். இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு சையது முஸ்தாக் அலி டிராபி போட்டியில் அரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கர்நாடக வீரர் அபிமன்யு மிதுன் சாதனை படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர், 2013 ஆண்டு வங்கதேச கிரிக்கெட் வாரிய லெவன் வீரர் அல் அமின் ஆகியோரும் 5 விக்கெட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : India Vs New Zealand: "எந்த அணியும் யாரையும் வெல்ல முடியும்" - கேன் வில்லியம்சன்!