அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (நவ. 19) கிளைமாக்ஸ் காட்சியான இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடங்கினர். சுப்மன் கில் நிதானமாக விளையாடிக் கொண்டு இருந்த நேரத்தில் மறுபுறம் ரோகித் சர்மா அடித்து ஆடத் தொடங்கினார்.
-
World Cup 2023 : 6 வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி...#etvbharat #etvbharattamil #Worldcupfinal2023 #ICCMensCricketWorldCup2023 #AUSvIND #Australia #India pic.twitter.com/icQwkrLhGS
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">World Cup 2023 : 6 வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி...#etvbharat #etvbharattamil #Worldcupfinal2023 #ICCMensCricketWorldCup2023 #AUSvIND #Australia #India pic.twitter.com/icQwkrLhGS
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 19, 2023World Cup 2023 : 6 வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி...#etvbharat #etvbharattamil #Worldcupfinal2023 #ICCMensCricketWorldCup2023 #AUSvIND #Australia #India pic.twitter.com/icQwkrLhGS
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 19, 2023
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுப்மன் கில் இந்த முறை பெரிய அளவில் சோபிக்கவில்லை. கில் 4 ரன் எடுத்து இருந்த போது மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆடம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
கிளென் மேக்ஸ்வெல் பந்தில் ரோகித் சர்மா 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை, 4 ரன் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினார். 80 ரன்களுக்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியுடன், கே.எல் ராகுல் இணைந்த நிலையில் இருவரும் அணியை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அரைசதம் விளாசிய விராட் கோலி (54 ரன்) கம்மின்ஸ் பந்தில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.
ஒருபுறம் கே.எல்.ராகுல் போராடிக் கொண்டு இருக்க, மற்றொரு புறம் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். ரவீந்திர ஜடேஜா 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்து விளையாடிக் கொண்டு இருந்த கே.எல்.ராகுல் (66 ரன்), மிட்செல் ஸ்டார்க் பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்தனர். முகமது ஷமி 6 ரன், ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது சிராஜ் 9 ரன்னுடன் களத்தில் கடைசி வரை இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் அகியோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
-
1987 🏆 1999 🏆 2003 🏆 2007 🏆 2015 🏆 2️⃣0️⃣2️⃣3️⃣ 🏆
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝙰𝚄𝚂𝚃𝚁𝙰𝙻𝙸𝙰 𝙰𝚁𝙴 #𝙲𝚆𝙲𝟸𝟹 𝙲𝙷𝙰𝙼𝙿𝙸𝙾𝙽𝚂 🎉 pic.twitter.com/YV19PzpV1n
">1987 🏆 1999 🏆 2003 🏆 2007 🏆 2015 🏆 2️⃣0️⃣2️⃣3️⃣ 🏆
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 19, 2023
𝙰𝚄𝚂𝚃𝚁𝙰𝙻𝙸𝙰 𝙰𝚁𝙴 #𝙲𝚆𝙲𝟸𝟹 𝙲𝙷𝙰𝙼𝙿𝙸𝙾𝙽𝚂 🎉 pic.twitter.com/YV19PzpV1n1987 🏆 1999 🏆 2003 🏆 2007 🏆 2015 🏆 2️⃣0️⃣2️⃣3️⃣ 🏆
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 19, 2023
𝙰𝚄𝚂𝚃𝚁𝙰𝙻𝙸𝙰 𝙰𝚁𝙴 #𝙲𝚆𝙲𝟸𝟹 𝙲𝙷𝙰𝙼𝙿𝙸𝙾𝙽𝚂 🎉 pic.twitter.com/YV19PzpV1n
241 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க பெரிய அளவில் அமையவில்லை. இந்திய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தொடக்க வீரர் டேவிட் வார்னர் (7 ரன்), மிட்செல் மார்ஷ் (15 ரன்), ஸ்டீவ் சுமித் (4 ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனிடையே கூட்டணி அமைத்த மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுக்சனே ஜோடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து மார்னஸ் லபுக்சனே அரை சதம் அடித்தார்.
நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அபாரமாக விளையாடிய டிராஸ் ஹெட்(137 ரன்) இறுதியில் ஆட்டமிழந்தார். 43 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலி அணி இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதையும் படிங்க : India VS Australia : ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு! இந்தியா மோசமான ஆட்டம்!