ETV Bharat / sports

ashes2023: கம்மின்ஸ் அபார ஆட்டத்தில் முதல் டெஸ்டில் போராடி வென்றது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 21, 2023, 11:38 AM IST

பர்மிங்காம்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் சதத்துடன் இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்தது. 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் அபார பவுலிங்கில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 282 என்ற எளிதான இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் ஆஸ்திரேலியா பவுலர் ஸ்காட் போலாண்ட் நைட் வாட்ச்மேனாக களமிறங்கினார். போலாண்ட் தன் பங்கிற்கு 20 ரன்கள் எடுத்து பிராட் பந்தில் அவுட்டானார். கடைசி நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா விக்கெட்டை முக்கிய விக்கெட்டாக கருதியது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த கவாஜா இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்தார். வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த டிராவிஸ் ஹெட் 16 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய கிரீன் 28 ரன்களுக்கு ராபின்சன் வீசிய லெங்க்த் பாலில் அவுட்டானார். ஆஸ்திரேலியாவிற்கு நம்பிக்கை தூணாக நின்ற உஸ்மான் கவாஜா இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். ஆனால் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை ஸ்டோக்ஸ் தகர்த்து எறிந்தார். கவாஜா ஸ்டோக்ஸ் வீசிய லெக் கட்டர் பந்தில் 65 ரன்களுக்கு போல்டானார்.

இந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் பகுதி நேரப் பந்துவீச்சாளரான ஜோரூட்டை ஸ்டோக்ஸ் பந்து வீச அழைத்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. கேரி 20 ரன்கள் எடுத்த நிலையில் ரூட் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். 227 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்த நிலையில் ஆஸ்திரேலியாவை முதல் டெஸ்டில் இங்கிலாந்து எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கம்மின்ஸ், லியான் ஆடிய ஆட்டம் இங்கிலந்து கனவை தகர்த்தது. இறுதி ஒரு மணி நேரத்தில் கேப்டன் கம்மின்ஸ் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இங்கிலாந்து அணிக்கு டென்ஷன் எகிறியது. லியானும் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக அடித்தார். இறுதியில் ராபின்சன் வீசிய பந்தில் கம்மின்ஸ் பவுண்டரி அடிக்க ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கம்மின்ஸ் 44 ரன்களுடனும், லியான் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி 'baz ball'ஆட்ட முறையினால் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழந்தபோது டிக்ளேர் செய்தது பாதகமாக அமைந்தது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 28ஆம் தேதி நடக்கவுள்ளது.

இதையும் படிங்க: TNPL 2023: சாய் சுதர்சன் அதிரடி: சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை கிங்ஸ்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.