கொல்கத்தா : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது அணியை தேர்வு செய்யும் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ. 16) நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்சை கேப்டன் டெம்பா பவுமா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடங்கினர். தொடக்கமே தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. கேப்டன் டெம்பா பவுமா, மிட்செல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடக்க ஜோடி இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் தென் ஆப்பிரிக்காவின் ரன் வேகத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் எளிதில் கட்டுப்படுத்தினர். ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் திணறினர். எய்டன் மார்க்ரம் 10 ரன், அவரைத் தொடர்ந்து ராஸ்ஸி வேன் டர் துஸ்சென் 6 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
14 ஓவர்களை கடந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிதுநேர இடைவெளிக்கு பின்னர் மீண்டும் போட்டி தொடங்கியது. ஒருபுறம் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தி வந்தாலும் மறுபுறம் டேவிட் மில்லர் நிலைத்து நின்று விளையாடி அணி 200 ரன்களை கடக்க உதவினார்.
அபாரமாக விளையாடி டேவிட் மில்லர் (101 ரன்) சதம் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். 49 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தப்ரைஸ் ஷம்சி 1 ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றார். ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜோஸ் ஹாசில்வுட், டிராவிஸ் ஹேட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
-
உலக கோப்பை கிரிக்கெட் 2வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! #ICCWorldCup #ICCCricketWorldCup23 #AUSvsSA #SAvsAUS #etvbharattamil #cwc2023 #CWC23INDIA #australia @CricketAus pic.twitter.com/ejNbFVLgVd
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உலக கோப்பை கிரிக்கெட் 2வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! #ICCWorldCup #ICCCricketWorldCup23 #AUSvsSA #SAvsAUS #etvbharattamil #cwc2023 #CWC23INDIA #australia @CricketAus pic.twitter.com/ejNbFVLgVd
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 16, 2023உலக கோப்பை கிரிக்கெட் 2வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! #ICCWorldCup #ICCCricketWorldCup23 #AUSvsSA #SAvsAUS #etvbharattamil #cwc2023 #CWC23INDIA #australia @CricketAus pic.twitter.com/ejNbFVLgVd
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 16, 2023
213 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அஸ்திட்ரேலிய அணியின் இன்னிங்சை ட்ராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டது.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. டேவிட் வார்னர் 29 ரன்களில் எய்டன் மார்க்ராம் பந்தில் க்ளீன் போல்ட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித், ட்ராவிஸ் ஹெட்டுடன் இணைந்து ஆட்டத்தை சுமூகமாக கொண்டு சென்றார்.
நிதான விளையாடிய இந்த ஜோடியை கேஷவ் மகராஜ் பிரித்தார். அவரது பந்தில் ட்ராவிஸ் ஹெட் (62 ரன்) க்ளீன் போல்ட்டாகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற, நிலைத்து நின்று நங்கூரம் போல் விளையாடி வந்த ஸ்டீவ் சுமித்தும் தன் பங்குக்கு 30 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனிடையே, கடைசி லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த கிளென் மேக்ஸ்வெல் இந்த முறை 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்லீஸ் தன் பங்குக்கு 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
47 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மிட்செல் ஸ்டார்க் 16 ரன்னும், பேட் கம்மின்ஸ் 14 ரன்னும் எடுத்து கடைசி வரையில் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றது.
-
உலக கோப்பை கிரிக்கெட் 2வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! #ICCWorldCup #ICCCricketWorldCup23 #AUSvsSA #SAvsAUS #etvbharattamil #cwc2023 #CWC23INDIA #australia @CricketAus pic.twitter.com/ejNbFVLgVd
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உலக கோப்பை கிரிக்கெட் 2வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! #ICCWorldCup #ICCCricketWorldCup23 #AUSvsSA #SAvsAUS #etvbharattamil #cwc2023 #CWC23INDIA #australia @CricketAus pic.twitter.com/ejNbFVLgVd
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 16, 2023உலக கோப்பை கிரிக்கெட் 2வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! #ICCWorldCup #ICCCricketWorldCup23 #AUSvsSA #SAvsAUS #etvbharattamil #cwc2023 #CWC23INDIA #australia @CricketAus pic.twitter.com/ejNbFVLgVd
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 16, 2023
வெற்றிக்காக தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் கடுமையாக போராடினர். தென் ஆப்பிரிக்க அணியில் தப்ரைஸ் ஷம்சி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கஜிகசோ ரபடா, எய்ட்ரன் மார்க்ராம், கேசவ் மகராஜ், ஜெரால்டு கோட்சி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி வரும் நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க : South Africa Vs Australia : ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு!