ETV Bharat / sports

IND VS PAK: மழையால் ஆட்டம் நிறுத்தம்.. மீண்டும் நாளை தொடக்கம்!

Asia Cup Super 4 Match: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 3-வது போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 3:07 PM IST

Updated : Sep 10, 2023, 10:31 PM IST

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிட வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேறும் அணிகள் இறுதி போட்டியில் மோத உள்ளன.

இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியாக இன்று (செப்.10) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இலங்கை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கே.எல்.ராகுலும், முகமது ஷமிக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ராவும் விளையாடுகின்றனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது. அதன்படி பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் அணியின் பந்து விச்சை நாளா புறமும் சிதரடித்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியது.

அதன்பின் இந்திய அணி 16.4 ஒவர்களில் 121 ரன்கள் எடுத்த நிலையில், ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழந்து 49 பந்துகளில் 59 ரன்களுடன் வெளியேறினர். அதனை தொடர்ந்து சுப்மன் கில் 52 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 24.1 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து உள்ளது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டி மழை குறிக்கிட்டு தொடர்ந்து பெய்ததால் ஆட்டமானது ரிசர்வ் நாளுக்கு அதாவது நாளை மாற்றப்பட்டுள்ளது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி 8(16) மற்றும் கே.எல் ராகுல் 17(28) களத்தில் உள்ளனர். நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Asia cup 2023: வங்கதேசத்தை பந்தாடிய இலங்கை! அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறிதான்?

Last Updated : Sep 10, 2023, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.