துபாய்: ஆசிய கோப்பை 2022 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆக. 27ஆம் தேதி தொடங்கியது. இதன் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளும் இடம்பெற்றிருந்தன. குரூப் சுற்றுகள் முடிவில் 'ஏ' பிரிவில் ஹாங்காங் அணியும், 'பி' பிரிவில் வங்கதேச அணியும் தொடரில் இருந்து வெளியேறின.
இதனைதொடர்ந்து, நடைபெறும் 'சூப்பர் -4' சுற்றில், மீதம் இருக்கும் நான்கு அணிகளும், மற்ற மூன்று அணிகளுடன் தலா 1 முறை மோதுகிறது. இதில், 'சூப்பர் - 4' சுற்றில், நேற்று (செப்.3) நடைபெற்ற முதல் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினர்.
இந்நிலையில், 'சூப்பர்-4' சுற்றின் 2ஆவது போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று (செப். 4) மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்பேட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
-
ASIA CUP 2022. India XI: R Sharma (c), KL Rahul, V Kohli, S Yadav, R Pant(wk), D Hooda, H Pandya, B Kumar, R Bishnoi, A Singh, Y Chahal. https://t.co/Yn2xZGBNtL #INDvPAK #AsiaCup2022
— BCCI (@BCCI) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ASIA CUP 2022. India XI: R Sharma (c), KL Rahul, V Kohli, S Yadav, R Pant(wk), D Hooda, H Pandya, B Kumar, R Bishnoi, A Singh, Y Chahal. https://t.co/Yn2xZGBNtL #INDvPAK #AsiaCup2022
— BCCI (@BCCI) September 4, 2022ASIA CUP 2022. India XI: R Sharma (c), KL Rahul, V Kohli, S Yadav, R Pant(wk), D Hooda, H Pandya, B Kumar, R Bishnoi, A Singh, Y Chahal. https://t.co/Yn2xZGBNtL #INDvPAK #AsiaCup2022
— BCCI (@BCCI) September 4, 2022
அணிகளின் மாற்றங்கள்: இந்தியா அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஆவேஷ் கான் ஆகியோருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஜடேஜா நாடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் அணி தரப்பில் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா: ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங்.
பாகிஸ்தான்: பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபக்கார் ஜமான், குஷ்தில் ஷா, இஃப்திகர் அகமது, ஷடாப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.
இதையும் படிங்க: கண்ணீருடன் விடைபெற்றார் செரீனா... வெற்றி பெற்றதற்கு மன்னிப்புகேட்ட எதிராளி