ETV Bharat / sports

ஐசிசி உலகக் போப்பை இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. அக்சருக்கு பதிலாக களமிறங்கும் அஸ்வின்!

Ashwin replaces Axar patel: ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

அக்சருக்கு பதிலாக களமிறங்கும் அஸ்வின்!
அக்சருக்கு பதிலாக களமிறங்கும் அஸ்வின்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 10:53 PM IST

ஹைதராபாத்: அடுத்த மாதம் துவங்க உள்ள ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி மாற்றம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே இடம் பெற்று இருந்த அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்கு பதிலாக தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல், போட்டியில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். இச்சூழல் இவரை ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் விளையாட விடாமல் ஆக்கியது. அதனைத் தொடர்ந்து, தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளிலும் அக்சர் பட்டேலின் இடத்தை அஸ்வின் நிரப்பினார்.

இந்நிலையில், அக்சர் பட்டேல் இயல்பு நிலைக்கு திரும்பாததை அடுத்து, அக்சர் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை இந்திய அணி தேர்ந்தெடுத்துள்ளது. சுழற்பந்தி வீச்சாளர் அஸ்வின், இந்தியா கோப்பை வென்ற 2011ஆம் ஆண்டு மற்றும் அரை இறுதிப் போட்டி வரை சென்ற 2015ஆம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா வர பாகிஸ்தான் அணிக்கு இவ்வளவு பிரச்சினையா? அதான் இவ்வளவு லேட்டா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.