ETV Bharat / sports

Ashes Test: 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்கள் இழப்பிற்கு 113 ரன்கள்! - ஆஸ்திரேலியா

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்கள் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்ப்பு.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா
england vs australia
author img

By

Published : Jul 22, 2023, 9:04 AM IST

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும், இங்கிலாந்து 1 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை (ஜூலை 19) தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்திருந்தது.

அதை தொடர்ந்து நேற்றய முந்தினம் (ஜூலை 20) ஆடிய ஆஸ்திரேலியா அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லபுசன் 6 பவுண்டரிகளுடன் 51, மிட்செல் மார்ஸ் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 51, ஹெட் 7 பவுண்டரிகளுடன் 48, ஸ்மித் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்களை சாய்த்தார். ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்களும் , ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் மற்றும் மொயின் அலி தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 384 எடுத்து 67 ரன்கள் முன்னிலை வகித்தது. பென் ஸ்டோக்ஸ் 24, புரூக் 14 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். தொடர்ந்து நேற்று (ஜூலை 21) ஆடிய இங்கிலாந்து அணி ஸ்டோக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 51 ரன்களிலும், புரூக் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும், மறுபக்கத்தில் பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 592 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோவ் 99 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 ரன்கள் எடுத்திருந்தனர். அதனையடுத்து கேமரூன் கிரீன் பந்து வீச்சில் ஆண்டர்சன் ஆவுட் ஆனார்.

இதனையடுத்து 275 ரன்கள் பின் தங்கிய நிலையில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க வீரர்களாக கவாஜா மற்றும் வார்னர் களம் இறங்கினர். கவாஜா 2 பவுண்டரிகளுடன் 18, வார்னர் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களம் கண்ட ஸ்மித் 17, ஹெட் 1 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 41 ஓவர்களில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. லபுசன் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், மார்ஸ் 1 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து அணி இந்த போட்டியை வென்று தொடரை தக்க வைக்கும் முனைப்பில் விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: IND VS WI: முதல் இன்னிங்ஸில் 438 ரன்னில் இந்தியா ஆல் அவுட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.