ETV Bharat / sports

இலங்கையை வெல்ல மாஸ்டர் பிளான்! நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சூசகம்! - நியூசிலாந்து இலங்கை உலக கோப்பை கிரிக்கெட்

World Cup Cricket 2023 : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேற நாளை (நவ. 9) நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் உள்ள நியூசிலாந்து அணி, பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 7:21 PM IST

பெங்களூரு : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கனிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் நேற்று (நவ. 7) மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது அணியாக ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இனி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற ஒரு இடம் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அதற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (நவ. 9) இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் அரைஇறுதி வாய்ப்பை நினைவில் கொள்ள முடியும். இல்லையெனில் அடுத்தடுத்த ஆட்டங்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இமாலய வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பை நியூசிலாந்திடம் இருந்து தட்டி பறிக்கக் கூடும்.

அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ள நியூசிலாந்து அணி, நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது. கணுக்கால் காயம் காரணமாக ஓய்வில் உள்ள லாக்கி பெர்குசனை, இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறக்கி விட நியூசிலாந்து அணி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், "பெர்குசன் சீரான வேகத்தில் பந்துவீசக் கூடிய வீரர் என்றும் இயற்கையாகவே அதிவேகத்துடன் பந்து வீசும் திறன் அவரிடம் உள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவரது பங்களிப்பு பெரிது உதவும் என தெரிவித்து உள்ளார்.

உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களில் டிரென்ட் பவுல்ட்டும் ஒருவர் என்றும் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அல்லது விளையாடிய சில ஆட்டங்களில், ஆடுகளங்கள் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதாகவும் கேன் வில்லியம்சன் கூறினார். புதிய பந்துகளில் நேர்த்தியாக பந்துவீசுவதில் ட்ரென்ட் போல்ட் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்றும் பல சந்தர்ப்பங்களில் அதை அவர் செய்து உள்ளதாகவும் வில்லியம்சன் கூறினார்.

இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவின் விளையாட்டு மெச்சத்தக்க வகையில் இருப்பதாகவும், குறிப்பாக இந்தியாவில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அணிக்கு அவர் அளித்து வரும் பங்களிப்பு அபாரமானது என்றும் ஆல் - ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா இந்திய ஆடுகளங்களில் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கி சிறப்பாக செய்லபட்டு வருவதாகவும்" கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான்! வாய்ப்பு இருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.