ETV Bharat / sports

"இதுவே சரியான தருணம்": ஆஸி. வீரர் ஆரோன் பின்ச் ஓய்வு! - இதுவே சரியான தருணம் ஆரோன் பின்ச்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் (36) அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Feb 7, 2023, 3:18 PM IST

Updated : Feb 7, 2023, 3:58 PM IST

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஆரோன் பின்ச். கடந்தாண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நாக் அவுட் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. இதனால் பின்ச் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். எனினும், தொடர்ந்து டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வந்தார்.

இந்நிலையில், அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பின்ச் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, "2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரை என்னால் விளையாட முடியுமா என தெரியவில்லை. ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தி பக்க பலமாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பின்ச் கூறியுள்ளார்.

2011ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்தார் பின்ச். அதிரடியாக விளையாடியதால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் 17 சதம், டி20 போட்டியில் 2 சதம் உட்பட சர்வதேச போட்டிகளில் எட்டாயிரத்து 804 ரன்களை குவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அவர், டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். ஆரோன் பின்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 76 டி20 போட்டிகளிலும், 55 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக 5 டெஸ்ட், 146 ஒருநாள் போட்டி, 103 டி20 போட்டி என மொத்தம் 254 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் 2015ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் பின்ச் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ILT20: துபாய் கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாகும் யூசுப் பதான்!

Last Updated : Feb 7, 2023, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.