ETV Bharat / sports

IND VS WI: இந்தியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி! - Keacy Carty

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா
india vs west indies
author img

By

Published : Jul 30, 2023, 7:36 AM IST

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கடந்த 27ம் தேதி நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று (ஜூலை 29) 2வது ஒருநாள் போட்டி, பார்படாஸிலுள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஸர் படேல் களம் இறக்கப்பட்டனர். ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோவ்மேன் பவல், டொமினிக் டிரேக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக கீசி கார்டி மற்றும் அல்சாரி ஜோசப் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ஷுப்மன் கில் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கி ஆடி வந்தனர். 16.5 ஒவரில் 90 ரன்கள் எடுத்த நிலையில் குடாகேஷ் மோதி சூழல் பந்துவீச்சில் ஷுப்மன் கில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இஷான் கிஷன் 6 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 55 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த அக்ஸர் 1, ஹர்திக் பாண்டியா 7, சஞ்சு சாம்சன் 9 ரன்கள் என களத்தில் நீடிக்காமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து ஜடேஜா 10 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களிலும், தாக்குர் 16 ரன்களிலும், குதீப் யாதவ் 8 ரன்களிலும், முகேஷ் குமார் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

40.5 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் குடாகேஷ் மோதி, ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்களும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களும், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கரியா தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் களம் கண்டனர். சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடியில் மேயர்ஸ் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதைத் தொடர்ந்து பிராண்டன் கிங் 15 ரன்களிலும், அலிக் அத்தானாஸ் 6 ரன்களிலும், ஷிம்ரோன் ஹெட்மியர் 9 ரன்களிலும், வெளியேறினர்.

அடுத்து களம் இறங்கிய கீசி கார்டி, ஷாய் ஹோப்வுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இருவரும் நிதனமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியில் 36.4 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது, இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தாக்குர் 3 விக்கெட்களை எடுத்தார்.

இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: ஒரே ஜெர்சியில் சஞ்சு சாம்சன் - சூர்யகுமார் யாதவ்.. குழப்பத்தில் இந்திய வீரர்கள், ரசிகர்கள்... என்னதான் காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.