ETV Bharat / sports

பாரதி கண்ட புதுமைப்பெண் பி.வி.சிந்து - தலைவர்கள் வாழ்த்து! - p.v.sindhu

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

p.v.sindhu
author img

By

Published : Aug 25, 2019, 10:36 PM IST

சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி. சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள பி.வி.சிந்துவிற்கு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், "பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் இந்திய நாடே பெருமைப்பட்டுள்ளது. உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துகள்" என்றார் .

இதனைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் "விளையாட்டில் இளம்தலைமுறையினர் சிறந்து விளங்க பி.வி.சிந்துவின் வெற்றி உத்வேகம் அளிக்கும்" என்றும் கூறியுள்ளார்.

"தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்த சிந்துவுக்கு வாழ்த்துகள்" என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

"பெண்மைக்குப் பெருமை சேர்த்த பாரதி கண்ட புதுமைப் பெண்ணை பாரத அன்னை உச்சி முகர்ந்து வாழ்த்துவார்” என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.