தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்றுடன் (ஜன.17) நிறைவடைந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின் - சீனாவின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.
பரபரப்புடன் நடைபெற்ற இப்போட்டியின் கரோலினா மரின் 21-09, 21-16 என்ற நேர் செட் கணக்கில் தாய் ஜூ யிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் டென் மார்க்கின் விக்டர் ஆக்செல்சன் - ஹாங்காங்கின் என்.ஜி. கா லாங் அங்கஸுடன் மோதினார். இப்போட்டியின் முடிவில் விக்டர் ஆக்செல்சன் 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் லாங் அங்கஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ. 50 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ. 25 லட்சமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: IND vs AUS: சிராஜை பாராட்டிய சச்சின்!