ETV Bharat / sports

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி; வெர்மா வெற்றி! - சாய்னா நேவால்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

Watch: Sameer Verma, Intanon and Sung won the first round of Thailand Open

author img

By

Published : Jan 20, 2021, 9:35 AM IST

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நேற்று (ஜன.19) தொடங்கியது. இதில் மகளிர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் - தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனானை (Ratchanok Intanon) எதிர்கொண்டார்.

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராட்சனோக் இன்டனான் 21-17, 21-08 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் சாய்னா நேவாலை வீழ்த்தினார். இதன் மூலம் சாய்னா நேவால் முதல் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சமீர் வெர்மா - மலேசியாவின் லீ ஸி ஜியாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை லீ ஸி ஜியா 21 18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து, தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சமீர் வெர்மா இரண்டாவது செட்டை 27-25 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார். இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

முதல் சுற்றில் சாய்னா தோல்வி; வெர்மா வெற்றி

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் செட் ஆட்டத்திலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் வெர்மா 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவின் சமீர் வெர்மா 18-21, 27-25, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லி ஸி ஜியாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க:தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய சிந்து, ஸ்ரீகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.