தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஜன.23) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரின் - கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கரோலினா முதல் செட்டை 21-19 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-15 என்ற கணக்கிலும் கைப்பற்றி சே யங்கிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் கரோலினா மரின் 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் அன் சே யங்கை வீழ்த்தி தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
முன்னதாக, கடந்த வாரம் தாய்லாந்தின் நடைபெற்ற பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கரோலினா மரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: பேட்டை உடைத்து வெற்றியை ருசித்த ஆக்செல்சன்; தாய்லாந்து ஓபனில் சுவாரஸ்யம்!