ETV Bharat / sports

தாய்லாந்து ஓபன்: காலிறுதியில் இந்திய இணை! - Thailand Open 2021

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Thailand Open: Satwiksairaj-Ashwini enter mixed doubles' quarters

author img

By

Published : Jan 21, 2021, 1:52 PM IST

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை - ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்ஃபு, இசபெல் ஹெர்ட்ரிக் இணையை எதிர்கொண்டது.

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் பொன்னப்பா இணை 22-20 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இரண்டாவது செட்டை 21-14 என்ற கணக்கில் மார்க் இணை கைப்பற்றி அசத்தியது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு அதிகரித்தது.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பொன்னப்பா இணை 21-16 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி மார்க் இணைக்கு அதிர்ச்சியளித்தது.

  • TOYOTA Thailand Open
    XD - Round of 16
    🇮🇳Satwiksairaj RANKIREDDY🏅
    22 14 21 🇮🇳Ashwini PONNAPPA🏅
    20 21 16 🇩🇪Mark LAMSFUSS
    🇩🇪Isabel HERTTRICH

    🕗 in 56 minutes
    https://t.co/363n2Y6T94

    — BWFScore (@BWFScore) January 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் மூலம் இந்தியாவின் அஸ்வினி, ரங்கிரெட்டி இணை 22-20, 21-14, 21-16 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மார்க், இசபெல் இணையை வீழ்த்தி தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் கலப்பு இரட்டையர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படிங்க: இத்தாலியன் சூப்பர் கோப்பை: 9ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜுவென்டஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.