25ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள பர்செல் நகரில் நடந்தது. இதில், பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி. வி. சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவை சந்தித்தார். இறுதியில் 21-7, 21-7 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹாராவை வீழ்த்தி பி. வி. சிந்து தங்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மனை என்ற சாதனையை படைத்தார்.
![பி.வி.சிந்து, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை இல்லத்தில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4300475_pvvvvv.png)
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முன்னாள் தடகள வீராங்கனை பி. டி. உஷா, திமுக தலைவர் மு. க ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
![பி.வி. சிந்து குடும்பத்துடன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்த போது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4300475_pvvv.png)
இந்நிலையில்,பேட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து தன் குடும்பத்துடன் தெலுங்கானா தலைநகரம் ஐதராபாத்தில் உள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது, அவர் வென்ற தங்கப் பதக்கத்தை காட்டி வெங்கையா நாயுடுவிடம் வாழ்த்துபெற்றார்.