2020ஆம் ஆண்டுக்கான இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு பட்டத்தை கைப்பற்றிய சாய்னா, இந்த ஆண்டும் பட்டத்தை கைப்பற்றி தனது ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் முதல் சுற்றில் சாய்னாவை எதிர்த்து ஜப்பான் வீராங்கனை தடகஹாஷி ஆடினார். அதில் முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் சரிசமமாக ஆட, இறுதியில் 19-21 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனை முதல் செட்டைக் கைப்பற்றினார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட் போட்டியில் 13-21 என மீண்டும் ஜப்பான் வீராங்கனை கைப்பற்றியது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.
இதையடுத்து நடந்த மூன்றாவது செட்டில் 5-21 என அபாரமாகக் கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டி சுமார் 50 நிமிடங்களில் முடிவடைந்தது. கடந்த வாரம் நடந்த மலேசியன் மாஸ்டர்ஸ் தொடரில் சாய்னா காலிறுதியோடு வெளியேறிய நிலையில், இந்தத் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் ப்ரனீத், இந்தோனோஷியாவின் சேஷார் ஹைரனிடம் 21-18,12-12, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சீனாவின் ஷி யூ கியூவிடம் 21-16, 18-21, 10-21 என்ற செட்களில் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
இதையும் படிங்க: ஸ்டீவ் ஸ்மித்தை ஆதரித்த கோலிக்கு ஐசிசி விருது!