இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் சமீபத்தில் நடத்தப்பட்ட டென்மார்க் பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில் கரோனா வைரஸ் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனை ரசிகர்கள் தவறாகப் புரிந்துகொண்டு பிவி சிந்து ஓய்வுபெறுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
அந்த அறிக்கையில், ''நான் இந்தச் சூழலிலிருந்து வெளியே வருவதைப் பற்றி சிந்தித்துவருகிறேன். மிகவும் கடினமாக இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக உள்ளது. அதனால்தான் இதனை எழுதுகிறேன். இதனைப் படித்து முடிக்கும்போது எனது பார்வையை அனைவரும் புரிந்துகொள்வீர்கள்.
இந்தக் கரோனா வைரஸ் சூழல் எனது கண்களைத் திறந்துள்ளது. என்னால் மிகவும் கடினமாகப் போராடி போட்டியாளர்களை வீழ்த்த முடியும். இதனை இதற்கு முன்னதாகவும் செய்துள்ளேன். இனியும் என்னால் செய்ய முடியும். ஆனால் இந்தக் கண்ணுக்குத் தெரியாத வைரஸை எப்படி வீழ்த்துவது எனத் தெரியவில்லை.
பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளோம். எப்போது வெளியே செல்லலாம் என்ற கேள்வி இப்போது வரை எழுந்துகொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்களில் கரோனாவால் வாழ்க்கை மாறியவர்கள் பற்றி படிக்கும்போது இதயம் நொறுங்குகிறது. அது நாம் வாழும் உலகத்தைப் பற்றி இன்னும் அதிகமாக என்னுள் கேள்வியை எழுப்புகிறது. இந்தியாவுக்காக டென்மார்க் ஓபனில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
இன்று இந்த அமைதியின்மையில் இருந்து வெளியேற விரும்புகிறேன். எதிர்மறையான எண்ணங்கள், பயம், நிலையற்றத்தன்மை ஆகியவற்றிலிருந்து மொத்தமாக ஓய்வு பெறுகிறேன். அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இந்த வைரசை அனைவரும் சேர்ந்து வீழ்த்த வேண்டும். இன்று நாம் எடுக்கும் முடிவே நம்மையும், அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் முடிவு செய்யும்.
- — Pvsindhu (@Pvsindhu1) November 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Pvsindhu (@Pvsindhu1) November 2, 2020
">— Pvsindhu (@Pvsindhu1) November 2, 2020
இருளில் சூழந்த பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். டென்மார்க் ஓபன் தொடரிலிருந்து விலகியது என்னைப் பயிற்சி செய்வதில் இருந்து நிறுத்தப் போவதில்லை.
வாழ்வில் ஒருமுறை நமக்கு வாய்ப்பு கிடைத்தால், மீண்டு வரும்போது இரட்டை பலத்துடன் வர வேண்டும். நான் சண்டையிடாமல் விடப்போவதில்லை. இந்தப் பயத்திலிருந்து வெளியேற போராடப் போகிறேன். உலகம் பாதுகாப்பானதாக மாறும் வரை தொடர்ந்து போராடுவேன்'' எனத் தெரிவித்துள்ளார்.