ETV Bharat / sports

இந்தோனேசியா மாஸ்டர்ஸ்: முதல் சுற்றோடு நடையைக் கட்டிய காஷ்யப், சமீர்! - சமீர் வர்மா

இந்தோனேசிய பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றிலேயே இந்திய வீரர்களான பாருப்பள்ளி காஷ்யப், சமீர் வர்மா அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

Indonesia Masters
Indonesia Masters
author img

By

Published : Jan 16, 2020, 9:01 AM IST

நேர் செட்களில் வீழ்ந்த காஷ்யப்

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டனைத் தொடர்ந்து தற்போது இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்றுவருகிறது.

இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பாருப்பள்ளி காஷ்யப், மலேசியாவின் அந்தோணி சினிசுகாவை எதிர்கொண்டார்.

  • DAIHATSU Indonesia Masters 2020
    MS - Round of 32
    21 21 🇮🇩Anthony Sinisuka GINTING🏅
    14 12 🇮🇳Kashyap PARUPALLI

    🕗 in 38 minutes
    https://t.co/hCwUrT2oye

    — BWFScore (@BWFScore) January 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அந்தோணி 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்குகளில் காஷ்யப்பை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

சமீர் வர்மா தோல்வி

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், இந்தியாவின் சமீர் வர்மா, இந்தோனேஷியாவின் டாமி சுகியார்டோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் சுகியார்டோ, 21-17 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்ற, இந்தியாவின் சமீர் வர்மா இரண்டாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடிகொடுத்தார்.

  • DAIHATSU Indonesia Masters 2020
    MS - Round of 32
    21 19 21 🇮🇩Tommy SUGIARTO🏅
    17 21 10 🇮🇳Sameer VERMA

    🕗 in 64 minutes
    https://t.co/YJkYhKUuz2

அதன்பின் ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுகியார்டோ 21-10 என்ற புள்ளிக் கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றி சமீர் வர்மாவை தோற்கடித்தார்.

முதல் சுற்றோடு முடிந்தது!

இத்தோல்வியின் மூலம் பாருப்பள்ளி காஷ்யப், சமீர் வர்மா இந்தோனேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறினர்.

இதையும் படிங்க:இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய சாய்னா!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.