இந்த ஆண்டுக்கான ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்றில் ஜப்பானின் கென்டோ மொமோட்டா விலகியதால் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில் அவர், சக நாட்டைச் சேர்ந்த சவுரப் வர்மாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 21-11, 15-21, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முதல் இந்தியராக நுழைந்துள்ளார். இதேபோல் நடைபெற்ற மற்றொரு இரண்டாம் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய் 12-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடம் தோல்வி அடைந்தார்.
முன்னதாக, நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், சமீர் வர்மா ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, இன்று இரவு நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப், தைவானின் செள தென் சென்னுடன் மோதவுள்ளார். அதேபோல் மகளிர் இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தாய்லாந்தின் புசனன் ஒங்பாம்ருங்பானுடன் (Busanan Ongbamrunphan) பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
இதையும் படிங்க: அரை மணி நேரத்தில் தொடரிலிருந்து வெளியேறிய சாய்னா நேவால்!