சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்தாண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காங் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடருக்கான எட்டு பேர் கொண்ட இந்திய அணி ஜனவரி மூன்றாம் தேதி தாய்லாந்திற்குச் சென்றது.
அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், இந்திய வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சி பெற அனுமதிக்கப்படுவதாகவும், தங்களது பிசியோ, பயிற்சியாளர்களைக் காண எங்களை அனுமதிக்கவில்லை என்றும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பிடம் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்றுள்ள 824 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின், வீரர்கள் தங்களது பயிற்சியாளர், பிசியோ ஆகியோரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய பேட்மிண்டன் அணி வீரர்கள் இன்று முதல் தங்களது பயிற்சிக்குத் திரும்பினர். இத்தகவலை இந்திய விளையாட்டு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் உறுதிசெய்துள்ளது.
-
First Gym Session🏋🏼🏋🏽
— BAI Media (@BAI_Media) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
After clearing the COVID-19 test, Indian 🇮🇳 team hits the gym ahead of their first training session in the evening ahead of #ThailandOpen2021. 💪
🎥 Exclusive snippet from the training session👇#IndianontheRise #Badminton#thailandOpen #Thailand pic.twitter.com/V5bDwjuqWB
">First Gym Session🏋🏼🏋🏽
— BAI Media (@BAI_Media) January 6, 2021
After clearing the COVID-19 test, Indian 🇮🇳 team hits the gym ahead of their first training session in the evening ahead of #ThailandOpen2021. 💪
🎥 Exclusive snippet from the training session👇#IndianontheRise #Badminton#thailandOpen #Thailand pic.twitter.com/V5bDwjuqWBFirst Gym Session🏋🏼🏋🏽
— BAI Media (@BAI_Media) January 6, 2021
After clearing the COVID-19 test, Indian 🇮🇳 team hits the gym ahead of their first training session in the evening ahead of #ThailandOpen2021. 💪
🎥 Exclusive snippet from the training session👇#IndianontheRise #Badminton#thailandOpen #Thailand pic.twitter.com/V5bDwjuqWB
இது குறித்த பதிவில், "கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி இந்திய அணியினர் தங்களது பயிற்சியை மேற்கொண்டுவருகின்றனர். இருப்பினும் வீரர்களுக்கான உடற்பயிற்சி நேரம் மதியம் 2-3 மணி வரையிலும், பயிற்சி நேரம் இரவு 7-8 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வீரர்கள் தங்களது பயிற்சியாளர், பிசியோ ஆகியோருடன் தங்களது பயிற்சியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 40 பேருக்கு கரோனா