ETV Bharat / sports

மூத்த பேட்மிண்டன் வீரர் நந்து நடேகர் காலமானார்!

இந்திய பேட்மிண்டன் மூத்த நட்சத்திரம் நந்து நடேகர் தனது 88ஆவது வயதில் காலமானார்.

Indian badminton great Nandu Natekar dead

author img

By

Published : Jul 28, 2021, 11:29 AM IST

புனே : பேட்மிண்டனில் சர்வதேச பட்டம் பெற்ற முதல் இந்தியர் நந்து நடேகர் இன்று (ஜூலை 28) காலமானார். இவர் 1956ஆம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் பட்டம் வென்றிருந்தார்.

88 வயதான நந்து நடேகர் தனது மகன் கௌரவ் மற்றும் இரு பெண் குழந்தைகள் ஆகியோருடன் வசித்துவந்தார். மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தில் பிறந்தவர் நந்து நடேகர். இவர் 100க்கும் மேற்பட்ட பட்டங்களை பேட்மிண்டனில் பெற்றுள்ளார்.

இவர் பேட்மிண்டன் வீரராக திகழ்ந்தபோது உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். இவருக்கு 1961ஆம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

Nandu Natekar
நந்து நடேகர்

நந்து நடேகரின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மிகவும் துயரமான செய்தி ஒன்றை பகிர்ந்துகொள்கிறோம். எங்கள் தந்தை நந்து நடேகர் ஜூலை 28 2021 காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்து நடேகர், 1965ஆம் ஆண்டு ஜமைக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tokyo Olympics: பி.வி. சிந்து வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.