ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடர் நவம்பர் 12 முதல் இன்று வரை நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தத் தொடரில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் வெளியேறினாலும் தனி ஆளாக இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் மட்டும் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப்போட்டிவரை முன்னேறினார்.
அரையிறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரர் லீ சியூக் யியுவை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த் தோல்வியைத் தழுவினார். இதன்மூலம் ஹாங்காங் வீரர் லீ சியூக் இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். இதனிடையே இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் லீ சியூக், உலகின் ஏழாம் நிலை வீரரான தாய்லாந்து வீரர் ஆண்டனி கின்டிங்கை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டை தாய்லாந்து வீரர் ஆண்டனி 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட லீ சியூக் அந்த செட்டை 21-10 என கைப்பற்றி ஆண்டனிக்கு அதிர்ச்சியளித்தார்.
பின்னர் வெற்றியாளரைத் தேர்வு செய்யும் இறுதி செட் ஆட்டத்தில் இரண்டு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றதால் யார் பட்டம் வெல்வார்கள் என்ற பதற்றம் கடைசி வரை நீடித்தது. இருப்பினும் இறுதிக்கட்டத்தில் சாம்பியன் புள்ளிகளைப் பெற்ற உள்நாட்டு வீரரான லீ சியூக் 22-20 என கடைசி செட்டைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
-
Highlights | In an all-consuming final Hong Kong’s Lee Cheuk Yiu wins his first ever HSBC BWF World Tour title on home soil 🏸#HSBCBWFbadminton #HSBCRacetoGuangzhou pic.twitter.com/NM59WFUMUh
— BWF (@bwfmedia) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Highlights | In an all-consuming final Hong Kong’s Lee Cheuk Yiu wins his first ever HSBC BWF World Tour title on home soil 🏸#HSBCBWFbadminton #HSBCRacetoGuangzhou pic.twitter.com/NM59WFUMUh
— BWF (@bwfmedia) November 17, 2019Highlights | In an all-consuming final Hong Kong’s Lee Cheuk Yiu wins his first ever HSBC BWF World Tour title on home soil 🏸#HSBCBWFbadminton #HSBCRacetoGuangzhou pic.twitter.com/NM59WFUMUh
— BWF (@bwfmedia) November 17, 2019
23 வயதே ஆகும் லீ சியூக் இந்த வெற்றியின் மூலம் தனது முதல் சர்வதேச பேட்மிண்டன் பட்டத்தை அவர் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று மகளிர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை ரட்ச்னோக் இண்டானனை வீழ்த்தி சீன வீராங்கனை சென் யு பெய் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடிவருகின்றனர். இந்த சூழலில் அந்நாட்டு பேட்மிண்டன் வீரர் அங்கு நடைபெற்ற தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.