ETV Bharat / sports

ஒலிம்பிக் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கோவை கல்லூரி மாணவர்! - Sports Authority of india

கோவை: ஒலிம்பிக் பயிற்சிக்காக இந்திய விளையாட்டுக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சதீஷ் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Coimbatore College student Selected for Junior TOPS

author img

By

Published : Aug 14, 2020, 2:18 PM IST

இந்திய விளையாட்டுக் கழகம் சார்பாக டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்ட மேம்பாட்டுக் குழு மூலம் 12 விளையாட்டு பிரிவுகளின் கீழ் இந்தியா முழுவதும் சிறப்பாக விளையாடும் 258 வீரர்களைப் பயிற்சிக்காக தேர்வு செய்துள்ளது.

அதில் ஓட்டப்பந்தயத்தில் 16 வீரர்களும், ஆர்செரியில் 34 பேரும், பேட்மிண்டனில் 27 பேரும். சைக்கிளிங்கில் 4 பேரும், டேபிள் டென்னிஸில் 7 பேரும், துப்பாக்கிச் சுடுதலில் 70 பேரும், நீச்சலில் 14 பேரும், குத்துச்சண்டையில் 36 பேரும், பளு தூக்குதலில் 16 பேரும், மல்யுத்தத்தில் 18 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25 ஆயிரம் பயிற்சிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த டார்கெட் ஒலிம்பிக் போடியம் என்பது ஒலிம்பிக் தொடருக்காக வீரர்களைத் தயார் செய்யும் திட்டமாகும். இதில் தமிழ்நாட்டிலிருந்து 2 வீரர்கள் டாப்ஸ் பயிற்சிக்கு தேர்வாகி இருக்கின்றனர். அதில் ஒருவர் கோவை காளப்பட்டியை சேர்ந்த சதீஷ்(21). ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஒலிம்பிக் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கோவை கல்லூரி மாணவர்

டாப்ஸ் (TOPS) திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது எப்படி உள்ளது என சதீஷ் குமாரிடம் பேசுகையில், '' ஜூனியர் டாப்ஸ் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சிறுவயது முதல் பேட்மிண்டன் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். சென்னையைச் சேர்ந்த நான், பேட்மிண்டன் பயிற்சிக்காக தான் கோவைக்கு மாறுதல் ஆனேன். எனது பயிற்சியாளர்கள், கல்லூரி நிர்வாகம், குடும்பத்தினர் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளார்கள்.

2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக், 2028ஆம் ஆண்டு நடக்கவுள்ள லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஆகிய இரண்டு தொடர்களிலும் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக தான் தீவிர பயிற்சி செய்து வருகிறேன்'' என்றார். இவருக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடர் : விவோ வெளியே, பதஞ்சலி உள்ளே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.