நடப்பு ஆண்டுக்கான சீன ஓபன் பேட்மிண்டன் ஃபுஷோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய நட்சத்திரங்களான பி.வி. சிந்து, சாய்னா நேவால், சாய் பிரனீத், பாருப்பள்ளி காஷ்யாப், சவுரவ் வர்மா ஆகியோர் மோசமான ஆட்டத்தால் தோல்வி அடைந்தனர்.
இருப்பினும், ஆடவர் இரட்டையர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாத்விக் சாய் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை தங்களது சிறப்பான ஆட்டத்தால் இந்தத் தொடரில் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறினர்.
-
Highlights | Minions activate ludicrous mode with unimaginable speed as they prevail over Rankireddy and Shetty in an electrifying semifinal 🏸
— BWF (@bwfmedia) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
#HSBCBWFbadminton #HSBCRacetoGuangzhou pic.twitter.com/ZqQ7l8SBEx
">Highlights | Minions activate ludicrous mode with unimaginable speed as they prevail over Rankireddy and Shetty in an electrifying semifinal 🏸
— BWF (@bwfmedia) November 9, 2019
#HSBCBWFbadminton #HSBCRacetoGuangzhou pic.twitter.com/ZqQ7l8SBExHighlights | Minions activate ludicrous mode with unimaginable speed as they prevail over Rankireddy and Shetty in an electrifying semifinal 🏸
— BWF (@bwfmedia) November 9, 2019
#HSBCBWFbadminton #HSBCRacetoGuangzhou pic.twitter.com/ZqQ7l8SBEx
இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் சாத்விக் சாய் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் மார்கஸ் ஃபெர்னால்டி - கெவின் சஞ்சாயா (Marcus Fernaldi - Kevin Sanjaya) ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய ஜோடி 16-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தனர்.