இன்டர்நேஷனல் சேலஞ்ச் பேட்மிண்டன் தொடர், வங்கதேசத்தின் தலைநகரான தாக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் லெவ்ங் ஜூன் ஹோவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்ஷயா சென் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்குகளில் ஜூன் ஹோவை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் லக்ஷயா சென், இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இவர் தொடர்ச்சியாக தனது ஐந்தாவது சர்வதேச பட்டத்தை வென்றுள்ளார்.
இது குறித்து லக்ஷய சென் தனது ட்விட்டர் பக்கத்தில், வங்கதேசத்தில் எனது 5ஆவது சர்வதேச பட்டத்துடன் வெற்றிகரமாக இந்த ஆண்டை முடித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியைப் போன்றே அடுத்த ஆண்டை நான் தொடர விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
-
Happy to end the year on a winning note with my 5th international title here in Bangladesh!! Hope to continue my good form in the next year 2020.
— Lakshya Sen (@lakshya_sen) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Like to thank all my sponsors @OGQ_India @Herbalifeindia @YonexInd @Sports_PDCSE @ppba @bai_media pic.twitter.com/giahtislEC
">Happy to end the year on a winning note with my 5th international title here in Bangladesh!! Hope to continue my good form in the next year 2020.
— Lakshya Sen (@lakshya_sen) December 15, 2019
Like to thank all my sponsors @OGQ_India @Herbalifeindia @YonexInd @Sports_PDCSE @ppba @bai_media pic.twitter.com/giahtislECHappy to end the year on a winning note with my 5th international title here in Bangladesh!! Hope to continue my good form in the next year 2020.
— Lakshya Sen (@lakshya_sen) December 15, 2019
Like to thank all my sponsors @OGQ_India @Herbalifeindia @YonexInd @Sports_PDCSE @ppba @bai_media pic.twitter.com/giahtislEC
இந்தியாவின் லக்ஷயா சென் இதற்கு முன், பெல்ஜியம் இன்டர்நேஷனல், டச் ஓபன், சார் லார்லக்ஸ் சூப்பர் ஓபன் மற்றும் ஸ்காட்டிஷ் ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தந்தையின் கனவை நிறைவேற்ற தங்கம் வென்று சாதனை படைத்த மகள்!