இந்தியா இன்டர்நேஷனல் சேலஞ்சு பேட்மிண்டன் தொடர் ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடரின் முதல் இரண்டு சீசன்கள் உள்நாட்டு தொடராக நடத்தப்பட்டது. அதன்பின் சர்வதேச தொடராக உருவான இத்தொடரில் இந்தோனேஷியா, தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டன.
இதனிடையே இந்தாண்டுக்கான இந்தியா இன்டர்நேஷனல் சேலஞ்சு பேட்மிண்டன் தொடர் நவம்பர் 20 (நாளை) முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையிலுள்ள இந்திய கிரிக்கெட் கிளப்பில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ரஷ்யா, அமெரிக்கா, பூட்டான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250 பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் இறுதிப்போட்டி நவம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக 25,000 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை இன்போசிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் அகாடமி நடத்துகிறது.