ETV Bharat / sports

ஸ்குவாஷ்: காலிறுதி சுற்றில் போராடி வீழ்ந்த ஜோஷ்னா சின்னப்பா!

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வரும் பிளாக் பால் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, நியூசிலாந்தின் ஜோலி கிங்கிடம் தோல்வி அடைந்துள்ளார்.

ஜோஷ்னா சின்னப்பா
author img

By

Published : Mar 14, 2019, 9:47 PM IST

மகளிர்களுக்கான பிளாக் பால் ஸ்குவாஷ் தொடர் எகிப்து நாட்டின் கெய்ரோவில் நடைபெற்று வருகிறது.

இதில், இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தின் ஜோலி கிங்கை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் செட்டை ஜோஷ்னா 11-7 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின் இரண்டாம் செட்டில் இவ்விரு வீராங்கனைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆடியதால், ஆட்டம் சூடுபிடித்தது. இதில், ஜோஷ்னாவை விட ஜோலி கிங் சிறப்பாக விளையாடியதால் 12-10 என்ற கணக்கில் வென்றார்.

பின் மூன்றாம் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோஷ்னா 11-2 என்ற கணக்கில் ஜோலி கிங்கை காளி செய்தார். பின்னர் ஆட்டத்தில் எழுச்சி பெற்ற ஜோலி கிங், நான்காவது செட்டை 11-5 என்ற வித்தியாசத்தில் வென்றார்.

இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் துல்லியமாக விளையாடிய ஜோலி கிங், 11-8 என்ற கணக்கில் ஜோஷ்னா சின்னப்பாவை வீழ்த்தினார்.இறுதியில் ஜோஷ்னா சின்னப்பா 11-7, 10-12, 11-2, 5-11,8-11 என்ற செட் கணக்கில் ஜோலி கிங்கிடம் போராடி தோல்வி அடைந்தார்.

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.