2019 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால சிறப்பு ஒலிம்புக் போட்டிகள் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 190 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக நடத்துப்படும் இந்த தொடரில், இந்தியாவில் சென்ற வீரர், வீராங்கனைகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளனர்.
தடகளம், சைக்கிளிங், ஜூடோ, பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இந்தியா, 60 தங்கம், 83 வெள்ளி மற்றும் 90 வெண்கலம் என இதுவரை 233 பதக்கங்களை குவித்து சாதனைப் படைத்துள்ளது.