ETV Bharat / sitara

தொலைக்காட்சி நிறுவனங்கள் நிர்பந்திக்கவில்லை - ராதிகா

சென்னை: மெகாத் தொடர்களுக்கான படப்பிடிப்பை நடத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் நிர்பந்திப்பதாக குஷ்புவின் ஆடியோவிற்கு ராதிகா மறுப்பு தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 20, 2020, 4:15 PM IST

Radhika
Radhika

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கான படப்பிடிப்பை நடத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதாக சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் நடிகை குஷ்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

குஷ்புவின் ஆடியோ

அதில், தொலைக்காட்சி நிறுவனங்கள் மே 5ம் தேதி முதல் தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும் மே 11ம் தேதி முதல் மெகா தொடர்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணியிடம் பேசினேன், அவர் யோசித்து கூறுவதாக கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசினேன். அவர் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஏப்.25ஆம் தேதிக்கு மேல் சுகாதாரத்துறையினரிடம் பேசிவிட்டு யோசித்து கூறுவோம். அது மட்டுமல்லாமல் கூட்டமாக சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.

முக்கிய நடிகர்களை மட்டும் வைத்து, அவுட்டோர் செல்லாமல் முகத்தில் முகமூடி அணிந்து, அனைவரும் பட பிடிப்பு தளத்தில் இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியம் ஏனென்றால் மீண்டும் இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு நம் தள்ளப்படக்கூடாது.

ஆகையால், 25, 26ஆம் தேதி வரை பொறுத்துக் கொள்ளவும். மே மாதம் 11ஆம் தேதி தொலைக்காட்சியில் மெகா தொடர்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் கூறியதை இன்னும் ஒரு வார காலம் நீட்டித்தால் உதவியாக இருக்கும்.

Radhika
நடிகை குஷ்பு

அதேபோல் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒரு நாளைக்கு ஒன்றரை எபிசோட்களாவது எடுக்க வேண்டும். அப்படி எடுத்து வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். நேரத்திற்கு படப்பிடிப்பை தொடங்குகள்.

காலை ஏழு முப்பது மணி முதல் இரவு ஒன்பது முப்பது மணி வரை படப்பிடிப்பு நடத்துங்கள். என்று கூறி ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராதிகா தொலைக்காட்சி நிறுவனங்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராதிகாவின் ஆடியோ

அதில், அமைச்சர், தொலைக்காட்சி நிறுவனத்திடம் நான் இன்று காலை பேசினேன். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் நடிகை குஷ்பு, தயாரிப்பாளர்களுடனும் பேசியுள்ளேன்.

இந்த நேரத்தில் நான் கூற விரும்புவது என்னவென்றால், தொலைக்காட்சி நிறுவனம் படப்பிடிப்புக்கு செல்லவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் படப்பிடிப்புக்கு செல்வதற்கு தயாராக இருங்கள் அதற்கான ஸ்கிரிப்ட் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியது.

படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனம் கூற முடியாது. ஷூட்டிங் போக வேண்டும் என்று அரசு தான் கூற வேண்டும். சென்னையை பொருத்தவரை இன்னும் ரெட் ஜோன் உள்ளது. அதுவும் முக்கியமாக கோடம்பாக்கம் ஆள் நடமாட்டமே இல்லாமல் ஹாட் ஜோனில் உள்ளது.

Radhika
நடிகை ராதிகா

குஷ்பு, அனைத்து தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசி, எப்படியெல்லாம் செயல்பட முடியும் என்பது குறித்து தெரிவிப்போம். இது தொடர்பாக ஆர்கே செல்வமணியிடமும் பேசியுள்ளோம். இப்பொழுது இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இந்த சூழ்நிலைக்கு ஏற்ப தான் நாம் பணியாற்ற வேண்டும் இதை மனதில் வைத்துக் கொண்டு நாம் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.