பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. பென்னி தயாள், அனுராதா ஸ்ரீராம், எஸ்பி சரண், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் ஸ்ரீதர் சேனா என்பவர் எலிமினேட் செய்யப்பட்டார். இவர் தான் ’சூப்பர் சிங்கர் 8’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் எலிமினேட்டானது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பலரும் இதற்குக் காரணம், நிகழ்ச்சியின் நடுவர்கள் தான் எனக் கூறி அவர்களையும் சமூக வலைதளங்களில் திட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயாள், அடுத்த சீசனிலிருந்து தான் விலகிக் கொள்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், "இனி சூப்பர் சிங்கர் தொடர்பாக நான் எந்த செய்தியையும் வெளியிட மாட்டேன். நானும் மனிதன் தான்.
என்னை பலரும் சமூக வலைதளங்களில் மோசமாகப் பதிவிடுவது சரியா? அடுத்த சீசனில் நான் நடுவராகப் பங்கேற்க மாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #HBDஆக்ஷன்கிங்அர்ஜுன்... வாய்ப்புகளை தனதாக்கி வெற்றி பெற்ற ’முதல்வன்’!