ETV Bharat / sitara

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் 'குக் வித் கோமாளி' பிரபலம் - கனி

பிக்பாஸ் 5ஆவது சீசனில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான கனி இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி
author img

By

Published : Sep 18, 2021, 1:37 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ், 4 சீசன்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி 100 நாள்கள் நடைபெறுள்ளது.

வாரத்திற்கு ஒருவர் வெளியேற, கடைசியாக இருக்கும் இரண்டு நபர்களில் ஒருவருக்கு பிக்பாஸ் டைட்டில் பட்டம் வழங்கப்படும். பிக்பாஸ் 5ஆவது சீசன் தொடங்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பலரும் யார் யார் இதில் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.

கனி
கனி

இந்நிலையில் பிக்பாஸ் 5ஆவது சீசனில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி டைட்டில் பட்டம் வென்ற கனி கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

முன்னதாக கனியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனக்கு பிக்பாஸில் கலந்துகொள்ளும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ருத்ர தாண்டவம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.