தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில் ராமானந்த் சாகர் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஞாயிறு காலையில் ஒளிப்பரப்பான தொடர் 'ராமாயாணம்'. 78 எபிசோட்களாக ஒளிப்பரப்பட்ட இந்தத் தொடரில் ராமராக அருண்கோவிலும் சீதையாக தீபிகா சிகாலியாவும் நடித்திருந்தனர்.
இவர்களுடன் லட்சுமணனாக சுனில் லஹ்ரியும் ராவணனாக அரவிந்த் திரிவேதியும் அனுமனாக தாரா சிங்கும் நடித்திருந்தனர். கரோனா அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டில் இருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு பொழுதுபோக்குக்கு தொலைக்காட்சியையே நம்பி இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் ராமாயணம் தொடரை மறு ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்று டிடி நிறுவனத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இன்று (மார்ச் 28) முதல் இத்தொடர் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
-
Taking me back to childhood. #Ramayan and #Mahabharat on @DDNational with the entire family! This was our routine weekend plan. 😍 so glad it’s restarted, great way for kids to learn Indian Mythology. pic.twitter.com/ZFc4X0oTFl
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Taking me back to childhood. #Ramayan and #Mahabharat on @DDNational with the entire family! This was our routine weekend plan. 😍 so glad it’s restarted, great way for kids to learn Indian Mythology. pic.twitter.com/ZFc4X0oTFl
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) March 28, 2020Taking me back to childhood. #Ramayan and #Mahabharat on @DDNational with the entire family! This was our routine weekend plan. 😍 so glad it’s restarted, great way for kids to learn Indian Mythology. pic.twitter.com/ZFc4X0oTFl
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) March 28, 2020
இந்தத் தொடரை பார்த்த காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னை மீண்டும் குழந்தை பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது. எனது குடும்பத்தினருடன் டிடி நேஷனலில் ராமாயணம், மகாபாரதம் பார்க்கிறோம். இது எங்களது வார இறுதி நாட்கள் திட்டமாகும். இந்தத் தொடர்கள் மறு ஒளிப்பரப்பு செய்யப்பட்டத்தில் மகிழ்ச்சி. இப்போது உள்ள குழந்தைகள் இந்திய புராணங்களைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி" என்று ட்வீட் செய்துள்ளார்.