சென்னை: விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி தனிகா, தனது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அன்றைய தினம் அவர் பதிவிட்ட புகைப்படமும், அதையொட்டி அவர் வெளியிட்ட அறிவிப்பும் அவரது ரசிகர்களை ஃபீல் செய்ய வைத்துள்ளது.
மாப்பிள்ளை, ராஜா ராணி உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் வைஷாலி நடித்துள்ளார். தற்போது, கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு உள்ளிட்ட சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதுவரை அவர் சீரியலில் வில்லியாகவே பெரும்பாலும் நடத்திருக்கிறார்.
இந்நிலையில்தான், தனது பிறந்தநாளான்று தனது காதலானான, சத்ய தேவ் என்பவரை திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்தார் வைஷாலி. மேலும், இதுதான் பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அடடா அழகு தேவதைக்கு திருமணமா? என லிட்டில் ஷாக்கில் இருக்கும், அவரது ரசிகர்கள் புல் ஃபீலிங்கோடு அவருக்கு வாழ்த்துகளை பொழிந்துவருகிறார்கள்.
இதையும் படிங்க: ரசிகர்களை தன்வசம் மய்யம் கொள்ளவைக்கும் அடா சர்மா!