தங்களின் அதிகம் பேசப்பட்ட அல்லது விவாதிக்கப்பட்ட ட்வீட்டுகளைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளையும், அதன் பின்னணியைப் பற்றியும் விவரிக்கும் பிரபல நிகழ்ச்சியான ’பிஹைன்ட் த ட்வீட்ஸ்’ இல் ப்ரியங்கா சோப்ரா பங்கேற்றதற்கு உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
-
The incomparable @priyankachopra takes us #BehindTheTweets to talk about her signature one-liners, married life with @nickjonas, and her new film #TheSkyIsPink pic.twitter.com/2Ip6iXJaW2
— Twitter Movies (@TwitterMovies) October 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The incomparable @priyankachopra takes us #BehindTheTweets to talk about her signature one-liners, married life with @nickjonas, and her new film #TheSkyIsPink pic.twitter.com/2Ip6iXJaW2
— Twitter Movies (@TwitterMovies) October 7, 2019The incomparable @priyankachopra takes us #BehindTheTweets to talk about her signature one-liners, married life with @nickjonas, and her new film #TheSkyIsPink pic.twitter.com/2Ip6iXJaW2
— Twitter Movies (@TwitterMovies) October 7, 2019
“நான் ட்விட்டர் உபயோகிக்கத் துவங்கி வெகுநாட்கள் கடந்துவிட்ட நிலையில், என் ட்வீட்டுகளை திரும்பிப்பார்த்து அதுசார்ந்த கதைகளை மீட்டெடுத்தது குதூகலமாய் இருந்தது. என் வாழ்வின் உற்சாகமான, குதூகலமான சில தருணங்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதற்காகவே நான் இனி இதை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யவிருக்கிறேன். நம் எண்ணங்கள், உணர்ச்சிகளின் தொகுப்பாய் இந்நிகழ்ச்சி உள்ளது” என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து ப்ரியங்கா கூறியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாப் பாடகரும், ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனஸை மணந்த ப்ரியங்கா சோப்ரா, அதன்பிறகு பாலிவுட் படங்களில் பெரிதாய் தலைகாட்டாத நிலையில், தனது ’தி ஸ்கை இஸ் பிங்க்’ படத்தின் விளம்பரப் பணிகளுக்காகத் தற்போது இந்தியா வந்துள்ளார். வருகிற அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான ஃபரான் அக்தர், ’தங்கல்’ புகழ் சைரா வஸிம், ரோஹித் சரஃப் ஆகியோரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
திரைப்படமானது 'தி கேவ்' : 12 சிறுவர்கள் குகையிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம்!