விஜய் தொலைக்காட்சியில் வார நாட்களில் இரவு 9 மணிக்கு 'அரண்மனைக்கிளி' என்ற மெகா தொடர் ஒளிப்பரப்பாகிறது. இதில் நடித்து வரும் நடிகை மைனா, ஆசாரி சாதியை இழிவாகப் பேசி உள்ளதாக விஸ்வகர்மா அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், 'அரண்மனைக்கிளி' தொடரில் நடிகை மைனா விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நேற்று ஒளிப்பரப்பான இத்தொடரில் அவர் திருமணத்திற்கு தாலி செய்யும் ஆசாரி ஒருவரை இழிவாக பேசியது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இது அச்சாதியினரையும் அவர்கள் செய்யும் தொழிலையும் இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே அத்தொடரின் இயக்குநர், வசன கர்த்தா, தயாரிப்பாளர், நடிகை மைனா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதில் தெரிவித்தனர்.