தொண்டைப் பிரச்னை காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிரபல பாப் பாடகி மிலே சிரஸ், சிகிச்சைக்குப் பிறகு தன் குரலைப் பாதுகாக்க வேண்டி, தற்காலிகமாக பாடுவதிலிருந்து விலகி, ஓய்வெடுத்து வருகிறார்.
ரெக்கிங் பால் (Wrecking Ball), வி கான்ட் ஸ்டாப் (We cant stop) போன்ற பிரபல ஆல்பங்களின் பாப் பாடகியான 26 வயது மிலே சிரஸ், டான்ஸில்ஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து சிகிச்சையின்போது தன் குரல்வளையும் பாதிப்படைந்திருப்பதை அறிந்து, அதற்கும் சேர்த்து சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்கினார்.
சமீபத்தில் அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், மிலே சிரஸ் தற்போது தன் புதிய ஆல்பத்தின் ரெக்கார்டிங் பணிகளை நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார். மிலே ஓய்வெடுத்துக் கொள்வதாக அறிவித்து, சுமார் மூன்று வார காலம் ஆகியுள்ள நிலையில், வரும் வருடத்தில் அவர் முழுமையாகக் குணமடைந்து வந்து, தன் பாடல் பணிகளையும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அவரது 2020ஆம் ஆண்டிற்கான இசை சுற்றுப்பயணத்தையும் உற்சாகமாகத் தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி தன் குரல்வளைக்கு தான் மட்டுமே ஓய்வளித்திருப்பதாகவும் தன் உடலுக்கு ஓய்வளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள மிலே, முன்னதாக நடிகர் லியம் ஹெம்ஸ்வொர்த் உடனான பிரிவைத் தொடர்ந்து, 'ஸ்லைட் அவே' என்னும் பாடலை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தார்.
தனது தற்போதைய காதலரான கோடி சிம்ப்ஸன் மிலேவுடன் மருத்துவமனையில் தங்கி, முழு உறுதுணையாக இருந்து, உற்சாகப்படுத்தி வருவதையும் மிலே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
ஆஸ்கரே தேடிச்சென்று பெருமைகொண்ட நாயகன் லியனார்டோ டிகாப்ரியோவின் சாதனைப் பயணம்!