ETV Bharat / sitara

ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள இரு பிரபலங்களின் தன்பால் ஈர்ப்புக்காதல்!

author img

By

Published : Sep 16, 2019, 12:43 PM IST

Updated : Sep 16, 2019, 1:16 PM IST

நட்பு காதலாக மாறி தற்போது பொதுவெளியில் வெளிகாட்டும் அளவுக்கு தங்களது அன்பை வளர்த்துள்ளனர் பாடகி மைலி சைரஸ் - கேத்லின் கார்டர் ஜோடி.

Miley cyrus romances with kaitlynn carter

கண்டதும் காதல், காணாமலும் காதல், ஒரு தலைக்காதல் போல் ஹாலிவுட்டில் தன்பால் ஈர்ப்புக் காதல் என்பது பிரபலங்களிடையே மிகவும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது.

இந்தப் காதல் உறவு பட்டியலில் பல்வேறு இளம் நடிகைகள், பாடகிகள் இருந்து வரும் நிலையில், அவர்கள் அவ்வப்போது டேட்டிங் செல்வது, பொது இடங்களில் தங்களது அன்பை வெளிகாட்டுவதுமாக இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஹாலிவுட் லேட்டஸ்ட் தன்பாலின ஈர்ப்பாளர்களாக பாடகி மைலி சைரஸ் - பிளாக் எழுத்தாளர் கேத்லின் கார்டர் ஆகியோரின் காதல் குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் இரவுநேர கேளிக்கை ஒன்றுக்கு தங்களது நண்பர் படையுடன் சென்ற இருவரும் சேர்ந்து கைகளை கோர்த்துக்கொண்டு ஒன்றாக நடனமாடியது ஹாட் டாப்பிக்காகப் பேசப்பட்டது.

அத்துடன், பலபேர் முன்னிலையில் இவர்கள் நிகழ்த்திய முத்தமழை க்யூட்டாக இருந்ததாகப் பலரும் உச்சிக்கொட்டியுள்ளனர்.

ரகசியமாக இருந்த சைரஸ் - கார்டர் காதல், இருவரும் இணைந்த போட்டோக்களை வெளியிட்ட சில நாட்களுக்கு முன் தெரியவந்தது. 2018 டிசம்பரில் ஹாலிவுட் நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை திருமணம் செய்த மைலி சைரஸ், 2019 ஆகஸ்ட்டில் பிரிவதாக அறிவித்தார்.

இதேபோல், நடிகர் பிரோடி ஜென்னர் என்பவரை 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட கார்டர், சைரஸைப் போல் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பிரிவதாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கணவன்களை பிரிந்த இருவரும் தற்போது தன்பால் ஈர்ப்புக் காதலால் ஒன்று சேர்ந்துள்ளனர்.

Intro:Body:Conclusion:
Last Updated : Sep 16, 2019, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.