பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிவருகிறார். பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி கடந்த சில மாதங்கள் முதல் ஒளிபரப்பாகிவருகிறது.
இந்த நிலையில் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா கார்த்திகா (31) என்பவர் கலந்துகொண்டார்.
காது கேட்க முடியாமல், வாய் பேச முடியாமல் உள்ள இவர், பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ. படித்துள்ளார். தற்போது நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார். தனக்கு குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வேண்டும் என்பதே தனது கனவு என்று கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கூறினார்.
இந்த நிலையில் கௌசல்யா, கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கு சரியாகப் பதில் கூறி 1 கோடி ரூபாய் வென்றுள்ளார்.
-
A hug is worth more , today’s winner of 1 crore prize money the #Koteeswari @ColorsTvTamil #KousalyaKharthika pic.twitter.com/QZvCLbfGyr
— Radikaa Sarathkumar (@realradikaa) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A hug is worth more , today’s winner of 1 crore prize money the #Koteeswari @ColorsTvTamil #KousalyaKharthika pic.twitter.com/QZvCLbfGyr
— Radikaa Sarathkumar (@realradikaa) January 21, 2020A hug is worth more , today’s winner of 1 crore prize money the #Koteeswari @ColorsTvTamil #KousalyaKharthika pic.twitter.com/QZvCLbfGyr
— Radikaa Sarathkumar (@realradikaa) January 21, 2020
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு கோடி ரூபாய் வென்ற முதல் மாற்றுத்திறனாளி என்ற சாதனையை கௌசல்யா படைத்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் வென்றது தனக்கு மகிழ்ச்சி என்றும், இனிமேல் தானும் ஒரு கோடீஸ்வரிதான் எனவும் கௌசல்யா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகர்களுள் சந்தானமும் ஒருவர்' - இயக்குநர் புகழாரம்