அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான ஃப்ரெண்ட்ஸ், வேறு பல ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன்.

தற்போதைய கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், திரைத்துறை கலைஞர்கள் பல்வேறு உதவிப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்டும் பொருட்டு, தன்னுடைய நிர்வாணப் புகைப்படம் ஒன்றை ஏலத்திற்கு விட ஜெனிஃபர் ஆனிஸ்டன் முடிவெடுத்துள்ளார்.
51 வயதாகும் நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன், 1993ஆம் ஆண்டு மார்க் செலிஜெர் எனும் பிரபல புகைப்படக் கலைஞர் எடுத்த இந்த புகைப்படத்தை தற்போது ஏலத்தில் விட முடிவெடுத்திருப்பதாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிதி அமெரிக்காவில் உள்ள மருத்துவ வசதிகள் பெற முடியாத ஏழைகளுக்கு ஓர் தனியார் அமைப்பின் மூலம் முழுவதுமாக சென்றடையும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ஜெனிஃபர் ஆனிஸ்டனின் புகைப்படத்துடன் சேர்த்து, லியானர்டோ டி காப்ரியோ, ஓப்ரா வின்ஃப்ரே உள்ளிட்ட 25 பிரபலங்களின் புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மீண்டும் இணைந்த 90களின் பிரபல ஹாலிவுட் ஜோடி - குழப்பத்தில் ரசிகர்கள்