லாஸ் ஏஞ்சல்ஸ்: தனக்கு 25 வயது பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து ஜேன் செய்மோர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
‘க்ளோ அன்ட் டார்க்னெஸ்’ டிவி சீரிஸில், தன் கதாபாத்திரத்தின் இளம் வயது கேரக்டரில் வேறு ஒருவர் நடித்தது குறித்து ஜேன் செய்மோர் (69) வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், தயாரிப்பாளர்கள் நான்தான் என்னுடைய இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்தனர். ஆனால், என்னிடம் சொல்லாமலே வேறு ஒரு நடிகையை அதில் நடிக்க வைத்திருக்கின்றனர் என்றார்.
மேலும் அவர், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும். எனக்கு அவர்கள் மேக்கப் போடக்கூட தேவையில்லை. அப்படியே நடிக்க வைக்கலாம். ஜோன் காலின்ஸ் தன்னுடைய 87 வயதில் 40 வயது பெண்மணியின் கதாபாத்திரத்தில் நடித்தார். எனக்கு மேக்கப் போடுவதில் விருப்பமில்லை. ஆனால், படக்குழுவினர் விரும்பினால் அதற்கு ஒப்புக்கொள்வேன். மேக்கப் போடுவது மனிதர்களை பொம்மை போல் காட்டும் என தெரிவித்தார்.