ETV Bharat / sitara

501 கிலோ எடையை அசால்ட்டாய் தூக்கிய ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நாயகன்! - ஹாலிவுட் சீரிஸ் செய்திகள்

’கேம் ஆஃப் த்ரான்ஸ்’ புகழ் ஹஃப்தார் ஜார்ன்ஸன், ’டெட் லிஃப்டிங்’ எனப்படும் பளு தூக்குதல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

’கேம் ஆஃப் த்ரான்ஸ்’ புகழ் நடிகர் ஹஃப்தார் ஜார்ன்ஸன்

author img

By

Published : May 3, 2020, 4:25 PM IST

பிரபல கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொலைக்காட்சித் தொடரில் தி மவுண்டெய்ன் (The Mountain) எனப்படும் சர் க்ரெகார் க்ளெகேன் (Ser Gregor Clegane ) எனும் பிரபல கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஹஃப்தார் ஜார்ன்ஸன் (Hafthor Bjornsson).

எவராலும் எளிதில் வீழ்த்த முடியாத அரக்க குணம் படைத்த பலசாலி கதாபாத்திரத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸில் தோன்றிய நடிகர் ஹஃப்தார், தன் நிஜ வாழ்விலும் தான் பெரும் பலசாலி என்பதை தற்போது நிரூபித்துக் காட்டியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ’டெட் லிஃப்டிங்’ எனும் பளு தூக்குதல் போட்டியில், 501 கிலோ எடை வரை தூக்கி உலக சாதனை படைத்துள்ளார் நடிகர் ஹஃப்தார். முன்னதாக 2016ஆம் ஆண்டு எட்டி ஹால் என்பவர் 500 கிலோ எடை வரை தூக்கி சாதனை படைத்திருந்த நிலையில், அவரது சாதனையை சுக்கு நூறாக உடைத்து ஹஃப்தார் உலக சாதனை படைத்திருக்கிறார்.

ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு உலகின் வலுவான மனிதனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ன்ஸன், இந்த நாளை எஞ்சியுள்ள காலம் முழுவது நினைத்து மகிழ்ந்திருப்பேன் எனவும், தன் எதிரிகள் உட்பட சாதனை படைக்க வழிவகுத்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இத்தாலி சினிமாவில் மீண்டும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.