ETV Bharat / sitara

140 இடங்களில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எம்மி விருதுகள் - சின்னத்திரை ஆஸ்கார் விருதுகள்

வாஷிங்டன்: சின்னத்திரை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் எம்மி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இந்த  இந்த ஆண்டு உலகம் முழுவதும் 140 இடங்களில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

எம்மி விருதுகள்
எம்மி விருதுகள்
author img

By

Published : Aug 25, 2020, 7:59 PM IST

அமெரிக்காவிலுள்ள தொலைக்காட்சி அகாதமி சார்பில் ஆண்டுதோறும் எம்மி விருதுகள் (Emmy Awards) வழங்கப்பட்டு வருகின்றன. சின்னத்திரை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் எம்மி விருதுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறந்த நிகழ்ச்சி, தொடர்கள் மற்றும் அதில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

கரோனா பரவல் காரணமாக ஆண்டுதோறும் நிகழும் வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 72ஆவது எம்மி விருதுகள் இந்த ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான பாணியில் இல்லாமல் காணொலி காட்சி மூலம் புதுமையான முறையில் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. எம்மி விருது வழங்கும் நிகழ்வு காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவதால், போட்டியாளர்கள் தங்களது வீடுகளிலோ அல்லது விருப்பமான இடங்களிலோ விரும்பியவர்களுடன் பங்கேற்கலாம் என்று கூறி பரிந்துரை பட்டியலில் இருப்பவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது விழா கமிட்டியினர் உலகம் முழுவதும் 140 இடங்களில் விழாவினை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து விழா கமிட்டியின் முக்கிய நபரான ரெஜினோல்ட் ஹட்லின், இயன் ஸ்டீவர்ட் கூறுகையில், ஜிம்மி கிம்மல் இந்த ஆண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஆனால் முந்தைய ஆண்டு போல் சிவப்பு கம்பளம் இருக்காது. ஸ்டேபிள்ஸ் மையத்தில் ஒரு மேடையில் இருந்து எம்மிஸை அவர் தொகுத்து வழங்குவார்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பணியாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவார்கள். இந்த ஆண்டு நிகழ்ச்சியின்போது எங்களுக்கு இன்னும் சவாலான வேலைகள் உள்ளன. பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் அங்கு வரப்போவதில்லை. அவர்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் செல்கிறோம்.

எனவே எங்களுக்கு தேவையான தொழில்நுட்ப கருவிகள் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு என சவாலாக உள்ளது. தொழில்முறை கேமரா ஆபரேட்டர்கள் பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது ஸ்டேபிள்ஸில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குள் வரும் 140 நேரடி இடங்களிலிருந்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மறுமுனையில் உள்ள மக்களின் மனதை பொறுத்தது. அவர்கள் வீட்டில் இருக்கலாம், தோட்டத்தில் இருக்கலாம், ஒரு ஹோட்டலில் இருக்கலாம், அல்லது தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கலாம். அவர்கள் எங்கு வசதியாக இருக்கிறார்களோ அது ஒரு பொருட்டல்ல என்று கூறியுள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 30ஆம் தேதி எம்மி விருதுகளைப் பெறுவதற்கு லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள மைக்ரோசாப்ட் தியேட்டருக்கு வருமாறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.