பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'ஈரமான ரோஜாவே' தொடர் 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. இதில் ஷியாம், சாய் காயத்ரி, பவித்ரா உள்ளிட்டோர் நடித்துவந்தனர். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பான இந்தத் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதனை இதில் நடித்திருந்த சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். அதில், "அனைத்தும் முடிந்தது இன்று. ஈரமான ரோஜாவின் கடைசி நாள் படப்பிடிப்பு. லவ் யூ ஆல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தொடர் சுமார் 800 தொடர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'ஈரமான ரோஜாவே' தொடர் ஒளிபரப்பான பிரபல தொலைக்காட்சியில் புதிதாகப் பல தொடர்கள் வரிசைகட்டி நிற்பதால், இத்தொடர் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி 'ஈரமான ரோஜாவே' ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஈர்த்த சூப்பர் வில்லன் சாய் சித்தார்த்..!