ETV Bharat / sitara

அழகு நிலைய திறப்பு விழாவில் சாயிஷா, யாஷிகா, ஆர்ஜே பாலாஜி - Yolo beauty parlour new branch inaugration

சென்னை: ஒப்பனை சிகிச்சை மற்றும் தலைமுடி பொறுத்துதல் வசதியுடன் இருபாலருக்குமான அழகு நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் புதிதாக தோயோ என்ற ஒப்பனை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Yolo beauty parlour new branch inaugration in chennai
Celebs at Yolo beauty parlour new branch inaugration
author img

By

Published : Feb 14, 2020, 9:29 PM IST

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தங்கை மஹா, அண்ணாநகரில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் அழகு நிலையம் திறப்பு விழாவில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா நகரில் மஹா அழகு சாதன குழுமத்தின் புதிய கிளை 'யோலோ' என்ற பெயரில் திறக்கப்பட்டது. இருபாலருக்குமான அழகு நிலையமாக இருக்கும் யோலோவுடன் சேர்த்து ஒப்பனை சிகிச்சை மற்றும் தலை முடி பொறுத்துதல் அழகு நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகைகள் சாயிஷா, யாஷிகா ஆனந்த், அதுல்யா ரவி, நடிகர் ஆர்ஜே பாலாஜி ஆகியோர் வருகை தந்திருந்தனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவரது மனைவியுடன் கலந்துகொண்டனர். ஐசரி கணேஷின் தங்கைதான் மஹா அழகு சாதன குழுமத்தின் நிறுவனராக உள்ளார்.

மற்ற அழகு நிலையத்தை போல் இல்லாமல் புதிதாக தோயோ (Thoyo) என்ற ஒப்பனை சிகிச்சை மற்றும் தலை முடி பொறுத்துதல் வசதியுடன் இந்த அழகு நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த அழகு நிலையம் பல்வேறு இடங்களில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி அழகு நிலையத்தை சாயிஷா, யாஷிகா ஆனந்த், ஆர்ஜே பாலாஜி என பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.

Celebs at Yolo beauty parlour new branch inaugration

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ஜே பாலாஜி கூறியதாவது:

நடிகர்களுக்கு மத சாயம் பூச எனக்கு தெரியாது. இங்கு வந்தால் தலைக்கு கருப்பு சாயம் கலகலவென புசுகிறார்கள். இது போன்ற அழகு நிலையங்களால் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுகிறது. இதே போல் பல பெண்கள் சொந்தமாக தொழில் செய்து முன்வர வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து மாடல் அழகிகள் பங்கேற்ற குறுகிய ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.