பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.
கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பிக்பாஸ் 4ஆவது சீசன் தாமதமாக அக்டோபர் மாதம் தொடங்கியது. தற்போது, பிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறித்த தகவல், கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
![பிக்பாஸ் 5 சீசன் போட்டியாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12747077_bbcon.jpg)
இந்நிலையில், ’குக்கு வித் கோமாளி’ கனி, பாபா பாஸ்கர், சுனிதா, ஜான் விஜய், ஷகிலா மகள் மிலா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மலையாள பிக்பாஸ்: சீல் வைத்த வருவாய்துறை